நகர வாழ்க்கையின்
எந்திர நிகழ்வுகள்
தொலைத்து...
நல்ல தண்ணீரில்
நாலு நாளாவது
குளித்து...
தொலைக்காட்சியின்
தொல்லைகள்
துறந்து...
நண்பர்கள்
முகாமுக்குள்
நானும் கொஞ்சம்
தொலைந்திருந்து...
கண்மாய்க் கரைகளில்
காலாற நடந்து...
வயல்வெளிப்
பெண்களோடு
வம்பளந்து...
முளைக்கொட்டுத்
திண்ணையில்
ஊர் ரகசியம் பேசி...
முந்தைய வாழ்க்கையைத் தேடி
எங்கள் கிராமத்தில்
மீண்டும் நான்...
ஆனால்...?!
....................
....................
1 comment:
நாம் இழந்தது போதும்...மீதியுள்ளதையாவது இழக்காமல் பார்த்தாலே போதும். நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்
Post a Comment