Monday, May 31, 2010

ரகசியம்


நான்
தொலை தூரத்தில்
இருக்கையில்
சிணுங்குகிறாய்
தொலைபேசியில்

உன்
அத்தனை
ஆசைக் கேள்விகளுக்கும்
அன்பாய் பதிலுரைக்கிறேன்
நான்

உனக்குத் தெரியுமா?

நம் இருவரின்
குரல்களும்
முட்டி மோதிக் கட்டிப்
பிடித்துக் கொள்ளும்
ரகசியம்...?