இன்னைக்கு சாயங்காலம்
ஆபீசில இருந்து கெளம்புனேன்.
மவுண்ட் ரோட்ல ஒரே ட்ராஃபிக்!
என்னவா இருக்கும்?
ஒண்ணு முதலமைச்சர் போவாரு;
இல்லயின்னா மந்திரிக போவாக
அவ்ளோதான்!
இப்ப அது இல்ல மேட்டரு...
என்னன்னா
அவுக ஆட்சி நடந்தா...
அய்யய்யோ பாரு
இந்தம்மா வந்தாலே இப்புடித்தான்...
நியூசு கெளம்பும்...
அய்யா வந்தப்புறம்
இவுகளும் இப்படித்தானா...
சனங்க தூத்தும்...
இதுதான் மேட்டரா...
அட இது தெரிஞ்ச கததான...
அப்ப என்னதாம்பா மேட்டரு...
ஒண்ணுமில்லப்பா...
வாகனங்கள ஒழுங்குபடுத்துற
போலீசுகாரவுக இருக்காகள
அவுகள பத்தித்தான்...!
பாவம்பா அவுக...
போ.போ..போ...ன்னு மக்க மேல
எரிஞ்சு விழுந்து
இங்க ஓடி அங்க ஒடி
மனுசங்கள பிராண்டி எடுத்து
அங்க நிக்கிற பொம்பள (போலீசு) புள்ளைகளையும்
வெரட்டி எடுத்து
நம்ம தேவ தூதர்கள
(எல்லாம் நம்ம மந்திரிகதான்)
காப்பாத்த
அவுக பட்ட பாடுதான்
இங்க மேட்டரு!
என்ன மேட்டரு...
பதவியில இருந்தாலும்
மனுசங்களா இருங்க...
மனுசங்களா இருந்தீங்கன்னா
மறுபடியும் பதவி...
இல்லாமப் போனா
அட ஒங்களுக்கே தெரியும்.
கவித கொஞ்சம் போரடிச்சிச்சு.
அதான் செய்தி சொன்னேன்...
3 comments:
really nice
இப்போதுதான் அந்தக் கூத்தை அனுபவித்துவிட்டு அலுவலகத்துக்கு வந்தேன். பார்த்தால் அதே பொருள் இங்கே கவிதையாக...
மவுண்ட்ரோடு ட்ராபிக் பிரச்சினைய மட்டுமில்லாம மந்திரியா இருந்தாலும் மனுசனா இருங்கன்னு அழகா சொல்லியிருக்கீங்க. தொடரட்டும் உங்கள் சாட்டையடி
Post a Comment